விஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவதாரங்கள் உள்ளது.சிவபெருமான் 19 அவதாரங்களை கொண்டுள்ளார். அவதாரம் என்றால் கடவுள் வேண்டுமென்றே பூமியில் மனிதனாக அவதரிப்பது. மனிதர்களை காப்பாற்ற தீமையை அழிக்கவே அவதாரம் எடுப்பதன் முக்கிய நோக்கமாகும்.
சிவபெருமானை பற்றி பார்க்கையில், வெகு சிலருக்கே அவரின் 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அவரின் இந்த 19 அவதாரங்களுக்கும் குறிப்பிட்ட காரணங்கள் இருந்தது. அதன் உட்சபட்ச நோக்கம் மனித இனத்தின் நலனே.

சிவபெருமானின் 19 அவதாரங்கள்
1. பிப்லாட் அவதாரம்

தாதிச்சி துறவியின் வீட்டில் பிப்லாட்டாக பிறந்தார் சிவபெருமான்.
ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்பாகவே அத்துறவி அவர் வீட்டை விட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாமல் இருந்ததால் தன் தந்தை வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை பிப்லாட் வளரும் போது தெரிந்து கொண்டான்.
அதனால் சனியை பிப்லாட் சபித்து, தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தான்.
பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பாக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு சனியை மன்னித்தான்.
அதனால் பிப்லாட் வடிவிலான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.