இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணரோட முழு ஆசிர்வாதமும் கிடைக்க இத கண்டிப்பா பண்ணுங்க…!

Admin

 

இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணரோட முழு ஆசிர்வாதமும் கிடைக்க இத கண்டிப்பா பண்ணுங்க…!



கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் ஒரு இந்து திருவிழா கிருஷ்ண ஜெயந்தி. சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இந்த நாளில் நோன்பு மேற்கொள்வதன் மூலமும், கடவுளை வணங்குவதற்காக தங்கள் வீடுகளை அலங்கரிப்பதன் மூலமும், கோயில்களைப் பார்வையிடுவதன் மூலமும், பிரசாத் வழங்குவதன் மூலமும், ஏழைகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலமும் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

பகவான் கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். மதுராவின் குடிமக்களை தீய மன்னன் கன்சாவிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு, தேவகி மற்றும் வாசுதேவா ஆகியோருக்கு மகனாக பிறக்கிறார் கிருஷ்ணர். மகாபாரத போர்களில் வெற்றிபெற பாண்டவர்களுக்கு உதவுவதில் பகவான் கிருஷ்ணரும் முக்கிய பங்கு வகித்தார். பகவான் கிருஷ்ணர் பிறந்த சந்தர்ப்பத்தில், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில அழகான செய்திகளையும், பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள பொன்மொழிகளும் உங்களுக்காக நாங்கள் இங்கு பகிர்ந்துள்ளோம்.

வாழ்த்து 1
கிருஷ்ணர் எப்போதும் உங்களை மகிழ்ச்சியுடனும், அன்பு மற்றும் அமைதியுடன் இருக்க ஆசீர்வதிப்பார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
உங்கள் கவலைகள் அனைத்தையும் இந்த நாளில் கிருஷ்ணரிடம் விட்டு விடுங்கள். அவர் உங்களை கவனித்துக்கொள்வார். இனிய கிருஷ்ண ஜெயந்தி!

வாழ்த்து 3
உங்கள் வாழ்க்கையில் அன்பு, மகிழ்ச்சி, ஆதரவு மற்றும் செல்வம் ஆகியவை கிருஷ்ணரின் ஆசீர்வாதங்களால் நிரப்பப்படட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி!

வாழ்த்து 4
இந்த புனித நாளில்தான் மனித இனத்தை காப்பாற்றுவதற்காக பகவான் கிருஷ்ணர் பிறந்தார். இன்று கடவுள்மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவோம். இனிய கிருஷ்ண ஜெயந்தி!

வாழ்த்து 5
கிருஷ்ணரின் ஆசீர்வாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தரும்! ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

வாழ்த்து 6
கிருஷ்ணர் கீதையில் கற்பித்த பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எப்போதும் தர்மத்தின் வழியைப் பின்பற்றுங்கள். இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

வாழ்த்து 10
சுய அழிவு நரகத்திற்கு மூன்று வாயில்கள். அவை காமம், கோபம் மற்றும் பேராசை. இந்த மூன்றையும் கைவிடுங்கள், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

Demos Buy Now