5000 வருடங்களுக்கு முன்பு பீமா உருவாக்கிய பல மர்மங்கள் நிறைந்த குளம்
மஹாபாரதத்தில் தர்மர் சூதாட்டத்தில் நாடு நகரம் செல்வங்கள் என அனைத்தையும் இழந்தபிறகு பாண்டவர்கள் தங்கள் மனைவி திரௌபதியோடு வனவாசம் மேற்கொண்டனர். அந்த வனவாசத்தில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கு மிகவும் தாகம் ஏற்பட்டது, ஆனால் அவர்களுக்கு எங்கும் தண்ணீர் கிடைக்காமல் வெய்யில் தாக்கத்தால் திரௌபதிக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டு நா வறண்டுபோய் சோர்ந்து மயங்கி விழுந்துவிட .அப்போது பாண்டவர்களில் மிகுந்த பலம் வாய்ந்தவரான பீமா கோபத்தில் மலையைத் தன்னுடைய சக்திவாய்ந்த கதையினால் ஓங்கி அடிக்க பாறைபிளந்து தண்ணீர் வெளியானது.பிறகு பாண்டவர்களும் திரௌபதியும் தாகம் தனிந்தனர். அந்த இடமே தண்ணீர் நிறைந்த தொட்டியாகியது குளமாகியது
இந்த குளத்தைப் பார்ப்பது மிகவும் எளிமையானதாகத் தோணும் , ஆனால் பல மர்மங்களைக்கொண்டது . இந்த தொட்டியிலுள்ள தண்ணீர் கடந்த 5000 வருடத்துல எப்போதுமே வற்றியதே இல்லை இந்த குலத்தினுடைய நீர்மட்டம் எப்பவுமே ஒரே லெவல்ல இருக்கும் . ஆனால் ஆசிய கண்டத்தில் (வெள்ளம், புயல், சுனாமி) போன்ற இயற்கை சீற்றம் உருவாகும்போதெல்லாம் மட்டும் , குளத்தின் நீர் மட்டம் தானாகவே உயரத் தொடங்குது.2004 ல் சுனாமி தாக்கியபோது பீம்குண்டின் நீர்மட்டம்சுமார் 15 அடியாக உயர்ந்துள்ளது.நொய்டா மற்றும் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பங்களின் போது, அதன் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் போதெல்லாம், அதன் அறிகுறிகள் பீமா குண்டில் காணப்படுகின்றன.
இந்த இடம் மத்தியப்பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டத்திலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள புந்தேல்கண்டில் உள்ள பஜ்னா எனும் கிராமத்தில் அமைந்துள்ள.
