எந்த நோயையும் 48 நாட்களில் குணப்படுத்தும் நாராயணீய மந்திரம்! எப்படி உச்சரிப்பது
‘நாராயண பட்டத்திரி’ என்பவர் கேரளாவில் பிறந்த நம்பூதிரி பிராமண குலத்தைச் சார்ந்தவர். வடமொழியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் பாகவதத்தை கேட்பதற்கு இனிய ஸ்லோகங்களாக சுருக்க வடிவில் இயற்றியவர். இவர் பதினாறு வயது நிரம்புவதற்குள் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் சிறந்து விளங்கினார்.
கேரளாவில் அமைந்துள்ள குருவாயூரப்பன் கோயிலில் அமர்ந்து இந்த ஸ்லோகங்களை இயற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு ‘பக்கவாத நோய்’ இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் 1036 ஸ்லோகங்கள் 100 நாட்களில் எழுதி முடித்தார். அதில் ஒவ்வொரு (தசகம்)10 ஸ்லோகம் முடியும் பொழுதும் தனக்கு இருக்கும் நோயும் தீர வேண்டும் என்பதற்கு சில வாக்கியங்களும் எழுதியிருப்பார். சரியாக நூறாவது நாள் அவர் இந்த ஸ்லோகங்களை எழுதி முடிப்பதற்குள் அவருடைய நோயும் முற்றிலுமாக நீங்கிவிட்டது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
நாராயணீயம் பல உயர்ந்த வேதாந்த கருத்துக்களை உள்ளடக்கியது. இவை தென் இந்தியாவில் வாழும் பெரும்பாலான இந்துக்களின் வீடுகளிலும் இன்றளவும் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. எந்த நோயாக இருந்தாலும் அதை முழுமையாக தீர்க்கும் சக்தி இந்த ஸ்லோகத்திற்கு உண்டு. இதனை நிரூபிக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் மகா பெரியவா சன்னதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொடிய கேன்சர் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அம்மையார் ஒருவர் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்திருக்கிறார். அவர் தன் குறைகளை கண்ணீர் மல்க, ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமிகளிடம் கூறியிருக்கிறார். தனக்கு இருக்கும் இந்த நோயிலிருந்து விடுபட தன்னிடம் போதிய வசதி இல்லை என்பதையும் கூறியிருக்கிறார். இதைக்கேட்ட சுவாமிகள், அந்த அம்மையாரிடம், ‘நாராயணீய மந்திரத்தை’ தினமும் 48 முறை சொல்லி வாருங்கள் என்று அருளியிருக்கிறார்.
இதை தெய்வ வாக்காக கருதி அந்த அம்மையார், அவர் கூறியபடியே தொடர்ந்து 48 நாட்களுக்கு இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்திருக்கிறார் அதன் பிறகு பரிசோதனைக்கு சென்ற அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கேன்சர் நோய் முற்றிலும் குணமாகி விட்டதாக கூறி இருக்கிறார்கள். அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரத்தை நாமும் கூறி பலன் அடைவோமே!
நாராயணீயம் 8வது தசகம் ஸ்லோகத்தின் வரிகள்:
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே!
த்வமித்த முத்தாபித பத்மயோனி!
அனந்த பூமா மமரோக ராசிம்!
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
நாம் எவ்வளவோ மருத்துவத்தை நாடி பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வீணடித்திருக்கிறோம். கடவுள் மேல் நம்பிக்கை வைத்து இந்த மந்திரத்தை 48 நாட்களுக்கு தொடர்ந்து உச்சரித்து பார்ப்போம்.
