படத்தை உற்று பாருங்கள் உங்களை பற்றி நீங்களே தெரிந்துகொள்வீர்கள்
கீழே உள்ள புகைப்படத்தை ஒரு செகண்ட் உற்று பாருங்கள். அது உங்கள் கண்களுக்கு எதுவாக தோன்றுகிறதோ அதை மனதில் வைத்து கொண்டு மேலும் தொடர்ந்து வாசியுங்கள். நீங்கள் எப்படி பட்டவர் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு இரண்டு கைகள் போல் தெரிந்திருந்தால்:
எதை நாம் பார்க்கிறோமோ அது உண்மைதான் என்று நினைக்கும் நீங்கள் எல்லா செயல்களிலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். யாருடைய கருத்தையும் நீங்கள் கேட்க மாட்டீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு நீங்கள் தைரியசாலிகளாக தான் தெரிவீர்கள். உங்களின் அமைதியான குணம் மற்றும் தெளிவான முடிவெடுக்கும் ஆற்றல் மூலம் எத்தகைய இடர்களையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
உங்களுக்கு தீ ஜ்வாலை போல் தெரிந்திருந்தால்:
உங்களிடம் அளப்பரிய கற்பனை ஆற்றல் ஒளிந்து கொண்டிருக்கும். உங்களின் படைப்பாற்றல் இதுவரை உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம். அதை வெளிக்கொணர்ந்து சரியாக பயன்படுத்தினால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். யாராவது ஒருவர் உங்களை ஊக்குவித்தால் போதும் அதை பிடித்துக்கொண்டு நீங்கள் முன்னேறி விடுவீர்கள்.
உங்களுக்கு மரம்போல் தெரிந்திருந்தால்:
எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்ட உங்களிடம் யாரும் எதையும் மறைத்துவிட முடியாது. அடுத்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். நீங்கள் பல விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். இரக்க சுபாவம் கொண்டவர்களாக இருப்பீர்கள். முன்கோபம் உங்களின் பலவீனமாக இருக்கும்.
உங்களுக்கு எதுவுமே தோன்றாமல் இருந்திருந்தால்:
இந்த புகைப்படத்தை பார்த்து உங்களுக்கு எதுவும் தோன்றவில்லை என்றால் நீங்கள் இதை அதிகம் யோசித்து குழம்பி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதிக ஓய்வு தேவை. நீங்கள் எதையும் நிதானத்துடன் கையாள வேண்டும்.
