நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் அத்திவரதர் |அதிகாலை முதலே பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனம்

Admin
காஞ்சிபுரம் தேவராஜப் பெருமாள் கோயிலில், 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கோலாகலமாக நடந்துவருகிறது. ஜூலை 1-ம் தேதி தொடங்கி, கடந்த 31 நாள்களாக அத்திவரதர் சயன கோலத்தில் காட்சியளித்தார்.
நின்ற கோல அத்தி வரதரை தரிசிக்க அதிக பக்தர்கள் வருவர் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதல் ஆக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. பொது தரிசன வரிசையில் கூட்டம் அதிகம் இருந்தால் அவர்களை நிறுத்தி தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்ப வடக்கு மாட வீதியில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 10 ஆயிரம் பேர் தங்கலாம் எனவும் கூறியுள்ளது.

அத்திவரதர் நின்ற கோலத்திற்குத் தயாரான பிறகு, இன்று அதிகாலை 5.20 மணியிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நின்ற கோலத்தின் முதல் நாளான இன்று, அடர் ஊதா நிற பட்டுடுத்தி, மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.



நின்ற நிலையில் இருக்கும் அத்திவரதரைக் காண பக்தர்கள் நள்ளிரவு முதலே காத்திருக்கிறார்கள். மேலும், நேற்று மாலை காஞ்சிபுரம் வந்த வெளிமாநில பக்தர்களும் அத்திவரதரை தரிசிக்கக் காத்திருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் காஞ்சிபுரம் முழுவதும் அலைமோதுகிறது.


Demos Buy Now